follow the truth

follow the truth

July, 22, 2025
HomeTOP1இந்திய மருந்துகளை தரக்குறைவாக்கி இராஜதந்திர ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தாதீர்கள்

இந்திய மருந்துகளை தரக்குறைவாக்கி இராஜதந்திர ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தாதீர்கள்

Published on

இந்திய மருந்துகள் தரக்குறைவானவை என்ற முத்திரையை குத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன;

“.. நாட்டில் தற்போது ஏதேனுமொரு விடயத்தை மையமாக வைத்து, அதனால் எதிர்வரும் மாதங்களில் பாரிய அபாயம் ஏற்படப் போவதாக மக்களை பீதியடைய செய்யும் அரசியல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் அவ்வாறு எந்த அபாயமும் தற்போது ஏற்படவில்லை. கடந்த காலங்களில் தேசிய கடன் மறுசீரமைப்புக்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பாரிய ஆபத்து ஏற்படவுள்ளதாக மக்களை பயமுறுத்தினர்.

ஆனால் இன்று அவ்வாறு ஏதுவுமே இடம் பெறவில்லை. எனவே சமூகத்தில் அரசாங்கத்துக்கு எதிராக இவ்வாறு திட்டமிட்ட போலிப்பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது.

அதற்கமையவே மருந்துகள் குறித்தும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தியா, இலங்கைக்கு மாத்திரமின்றி பலநாடுகளுக்கும் மருந்துகளை விநியோகித்து வருகிறது. எனவே ஒரு சிலர் தமது குறுகிய நோக்கங்களுக்காக இந்திய மருந்துகள் தரக்குறைவானவை என்ற முத்திரையை குத்த முயற்சிக்கின்றனர்.

இவ்வாறான கருத்துக்கள் இராஜதந்திர ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்..” என தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வனப்பகுதியில் 03 காட்டு யானைகளின் உடல்கள் மீட்பு

தம்புள்ளை, சிகிரியா - திகம்பத்தஹ வனப்பகுதியில் 03 காட்டு யானைகளின் உடல்கள் இன்று(22) கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த யானைகள் சில நாட்களுக்கு...

அஸ்வெசும மேல்முறையீடுகளைச் சமர்ப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்திற்கான மேல்முறையீடு சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 31 ஆம் தேதி வரை...

மஹர சிறைச்சாலை வளவிலுள்ள பள்ளிவாசல் மீண்டும் திறக்க அனுமதி இல்லை – நீதி அமைச்சர்

மஹர சிறைச்சாலை வளவிலுள்ள பள்ளிவாசல் மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று...