follow the truth

follow the truth

July, 22, 2025
HomeTOP1பல்கலைக்கழக மாணர்கள் 14 பேருக்கு தற்காலிக வகுப்புத்தடை

பல்கலைக்கழக மாணர்கள் 14 பேருக்கு தற்காலிக வகுப்புத்தடை

Published on

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்களில் கல்வி கற்கும் 14 மாணவர்களுக்கு தற்காலிகமாக வகுப்புத்தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் உபவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் குறித்த 14 மாணவர்களது விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்களின் கல்வியை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த 05 கலாநிதி மற்றும் பேராசிரியர்கள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்ததாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அஸ்வெசும மேல்முறையீடுகளைச் சமர்ப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்திற்கான மேல்முறையீடு சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 31 ஆம் தேதி வரை...

மஹர சிறைச்சாலை வளவிலுள்ள பள்ளிவாசல் மீண்டும் திறக்க அனுமதி இல்லை – நீதி அமைச்சர்

மஹர சிறைச்சாலை வளவிலுள்ள பள்ளிவாசல் மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று...

மனுஷவின் பிரத்தியேக செயலாளருக்கு பிணை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளர் ஷான் யஹம்பத் பிணையில்...