தேங்காய் எண்ணெய் இறக்குமதி – உள்ளூர் தொழிற்சாலைகள் மூட வேண்டியநிலை

282

வெளிநாடுகளில் இருந்து பாரியளவில் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால் சுமார் 200 உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களிடம் இருந்து 200 ரூபா வரி அறவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய் உள்ளூர் தேவைகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் போதாது. அதனால்தான் குறிப்பிட்ட அளவு தேங்காய் எண்ணெயை நாடு இறக்குமதி செய்ய வேண்டும். உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளரை பாதுகாக்கும் பணி சிறப்பாக நடந்து வருவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here