அரசாங்கத்தின் புதிய ‘Visit Sri Lanka’ மூலோபாய சுற்றுலாத் திட்டம், அடுத்த சில மாதங்களில் வெளியிடப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக அதிக செயலூக்கம் கொண்ட 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் உள்ளடங்களாக 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவர்வதை நோக்காக கொண்டு இந்த புதிய ‘Visit Sri Lanka’ மூலோபாய சுற்றுலாத் திட்டம் வெளியிடப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
‘Bocuse d’Or 2023’ போட்டிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.