காட்டுத்தீ சூழ்ந்துள்ளதன் காரணமாக இத்தாலியின் பிரபல விமான நிலையம் மூடப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிசிலியில் சுமார் 70 பகுதிகளில் காட்டுத்தீ அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த பல நாட்களாக சிசிலி பகுதி வெப்ப அலை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே சிசிலிய தலைநகரில் உள்ள விமான நிலையம் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனையடுத்து விமான சேவைகள் பல இரத்து செய்யப்பட்டது.
இதனிடையே, அதிக வெப்பம் காரணமாக 16 நகரங்களுக்கு இத்தாலி சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.