மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்ற இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்காத காரணத்தால், ஆளும் அரசு மீது நாடாளுமன்ற இரு அவைகளிலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அறிவித்துள்ளார்.