follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஇந்திய முட்டைகள் காரணமாக இலங்கையின் முட்டை விலை குறைவடைகிறது

இந்திய முட்டைகள் காரணமாக இலங்கையின் முட்டை விலை குறைவடைகிறது

Published on

எதிர்வரும் 02 அல்லது 03 வாரங்களுக்குள் சந்தையில் 45 ரூபா தொடக்கம் 50 ரூபா வரையான விலையில் முட்டையொன்றை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் நுகர்வோருக்கு கிடைக்கும் என அகில இலங்கை முட்டை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அடுத்த வாரத்திற்குள் சந்தையில் போதுமான அளவு முட்டை கையிருப்பு இருக்கும் என அதன் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முட்டை தொழிலில் உள்ள சில பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் முட்டை 40ரூபாவுக்கு இன்று முதல் பல்பொருள் வர்த்தக நிலையங்களில் இருந்து பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் நுகர்வோருக்கு கிடைக்கிறது என அரச வணிக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார்.

தற்போது கொழும்பு, களுத்துறை கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இறக்குமதி செய்யப்பட்ட முட்டை சதொச மற்றும் பல்பொருள் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...