follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுஎந்தவொரு தேர்தலுக்கும் நாங்கள் தயார்

எந்தவொரு தேர்தலுக்கும் நாங்கள் தயார்

Published on

இன்று நாட்டில் சமூக மற்றும் மனிதாபிமானஅவலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கமொன்று இல்லாதது போலான நிலையில் சுகாதாரத்துறையில் ஊழல், மோசடிகள் அதிகரித்துள்ளன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அஸ்வெசும வரிசையிலும் மக்கள் உயிரிழக்கின்றனர் என்றும், சிறிய மற்றும் நடுத்தர வர்த்த முயற்சியாண்மைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்கள் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் நேரத்தில், ஆட்சியே இல்லை என்ற அளவுக்கு திருட்டு, மோசடி, ஊழல் தலைதூக்கியுள்ளதாகவும், பலவீனமான ஆட்சி நிர்வாகம் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தலை ஒத்திவைப்பதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் மக்கள் இருக்கும் அவலநிலையில் இருந்து காப்பாற்ற முடியாவிட்டால் புதிய ஆணைக்கு செல்ல வேண்டும் என்றும், அப்புதிய மக்கள் ஆணைக்குள் புதிய தேசிய கொள்கையின் மூலம் நாட்டின் இலக்குகளை அடைய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(28) தெரிவித்தார்.

எந்த தேர்தலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாகவும், மக்களின் கோரிக்கையான தேர்தல் உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், மக்கள் இறையாண்மை மற்றும் மக்கள் ஆணை எல்லாவற்றையும் விட முக்கியமானது என்றும், அரசாங்கத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாவிட்டால் மக்கள் ஆணைக்கு செல்ல வேண்டும் என்றும், மக்கள் ஆணை எனும் மக்களினது நீதிமன்றத்திற்குச் செல்ல ஐக்கிய மக்கள் சக்தி தயார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...