இரத்தினபுரி – எம்பிலிபிட்டிய வீதியின் கலஹிட்டிய பிரதேசத்தில் இன்று (30) காலை பேருந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்