follow the truth

follow the truth

July, 31, 2025
HomeTOP1தூக்க நகரமாக மாறிய காலி இனி விழித்திருக்கும்

தூக்க நகரமாக மாறிய காலி இனி விழித்திருக்கும்

Published on

காலி நகரை உறக்கமற்ற நகரமாக மாற்றும் நோக்கில் காலி வர்த்தக சம்மேளனமும் காலி மாவட்ட செயலகமும் இணைந்து புதிய செயற்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காலி வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஹேமந்த கமகே காலியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இதன் கீழ் இம்மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் காலி கோட்டை பாலதக்ஷ மாவத்தையை அண்மித்த பகுதியில் இந்த இரவு நகரம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காலி வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

இதன் கீழ், காலி கோட்டையை அண்டிய பகுதிகளில் இரவில் தங்கி பொருட்களை வாங்குதல், அதிக இன்பம், பொழுதுபோக்கு, உள்ளூர் உணவு மற்றும் பானங்கள் என பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இத்திட்டங்கள் ஒவ்வொரு வார இறுதியிலும் காலி நகருக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஹேமந்த கமகே சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த காலி வர்த்தக சம்மேளனத்தின் பணிப்பாளர் மகேந்திர லியனகே, சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் காலி நகரம் இரவு நகரமாக மாறியிருந்த போதிலும் பின்னர் காலி நகரம் தூக்க நகரமாக மாறியுள்ளது.

எவ்வாறாயினும், காலியை பரபரப்பான வர்த்தக நகரமாக மாற்றுவதே தமது நம்பிக்கை என மகேந்திர லியனகே தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலை 2025 மாதத்திற்கான பணவீக்கம் -0.3% ஆக உயர்வு

நாட்டின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், பணவீக்கம் ஜூலை 2025 இல் -0.3% ஆக உயர்ந்துள்ளதாக...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...

எம்.பி. ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் பிணையில் விடுவிப்பு

சட்டவிரோதமாக போலி ஆவணங்களை பயன்படுத்தி சொகுசு கார் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...