follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP1நீதிமன்றத்தில் ஆஜரான டொனால்ட் டிரம்ப்

நீதிமன்றத்தில் ஆஜரான டொனால்ட் டிரம்ப்

Published on

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தலைநகர் வாஷிங்டனில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

2020 ஆம் ஆண்டு வாக்கெடுப்பு முடிவுகளை ஏற்க மறுத்தமை, ஆதரவாளர்களை தூண்டுதல், காங்கிரஸின் பணிகளை சீர்குலைத்தல் மற்றும் வாஷிங்டன் கெபிடல் கட்டிடத்தை (அமெரிக்க பாராளுமன்றம்) தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியமை ஆகிய 4 குற்றச்சாட்டுகள் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ளது.

2020 ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனிடம் டிரம்ப் தோல்வியடைந்தார். அந்த தேர்தல் முடிவுகளை நிராகரித்து, டிரம்பின் ஆதரவாளர்கள் ஜனவரி 6, 2021 அன்று கெபிடல் கட்டிடத்தை முற்றுகையிட்டனர்.

வாஷிங்டனின் தலைநகரில் உள்ள பாரெட் பெட்ரிமேன் நீதிமன்றத்தில் ஆஜரான டிரம்ப் மீது 4 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன, மேலும் அவர் அந்த குற்றச்சாட்டுகளை நீதிபதி மோக்சிலா உபாதாயா முன் ஒப்புக்கொண்டார்.

வழக்கறிஞர்களின் துணையுடன், டிரம்ப் தனது தனி விமானத்தில் நியூஜெர்சியில் உள்ள தனது வீட்டிலிருந்து வாஷிங்டனில் உள்ள ஈ. பாரெட் பெட்ரிமேன் நீதிமன்றத்திற்கு வந்தார். நீதிமன்ற கட்டிடத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் ஆகஸ்ட் 28ஆம் திகதி டிரம்ப் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விலகுவது என்பது அவ்வளவு எளிதல்ல – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சில நாட்களாகவே விராட்...

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...