ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு அல் ஹுசைன் அல் ஹுசைனி அல் குரேஷி சிரியாவில் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளது.
சிரியாவின் இட்லிப் பகுதியில் துருக்கியின் ஆதரவு பெற்ற ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமுடன் நடந்த மோதலில் அதன் தலைவர் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் டெலிகிராம் சேனலில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், மரணம் எப்போது நிகழ்ந்தது என்பதை செய்தித் தொடர்பாளர் குறிப்பிடவில்லை.
இதற்கிடையில், தனது அமைப்பின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான அபு உமர் அல்-முஜஹிர், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பினால் கைப்பற்றப்பட்டதை ஐஎஸ்ஐஎஸ் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
மேலும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவராக அபு ஹஃப்ஸ் அல் ஹஷேமி அல் குரேஷியை நியமித்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அபு அல்-ஹுசைன் அல்-ஹுசைனி அல்-குரேஷி, நீண்ட கால ISIS தலைவர் அமெரிக்கர்களால் கொல்லப்பட்ட அபு பக்கர் அல்-பாக்தாதியின் மரணத்தைத் தொடர்ந்து அமைப்பின் மூன்றாவது தலைவராக நம்பப்படுகிறது.
அந்த அமைப்பின் தலைவர் மோதலில் இறந்துவிட்டதாக துருக்கி ஜனாதிபதி ரசெப் தயிப் அர்தோகன் சில வாரங்களுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.