ஜப்பான் நிதியுதவியுடன் 8,360 மெட்ரிக் டன் உரம் கையளிப்பு

244

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) எதிர்வரும் பருவத்தில் விநியோகிப்பதற்காக 8,360 மெட்ரிக் டன் யூரியா உரத்தை விவசாய அமைச்சகத்திற்கு வழங்கியுள்ளது.

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியின் மூலம் இது வழங்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் உலர் மற்றும் இடைநிலை வலயங்களில் உள்ள பல மாவட்டங்களில் உள்ள 228,000 சிறிய நெல் விவசாயிகளுக்கு அத்தியாவசிய உரங்கள் விநியோகிக்கப்படும், சிறிய அளவிலான நெல் விவசாயிகளின் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் விநியோகிக்கப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றன.

குருநாகல், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஒரு ஹெக்டேர் வரையிலான நிலங்களில் பயிர் செய்யும் விவசாயிகளை இலக்காகக் கொண்டு இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here