follow the truth

follow the truth

July, 10, 2025
Homeவணிகம்சவாலான காலங்களில் வாடிக்கையாளர்களுடன் இருந்த எயார்டெல் லங்கா மீண்டும் அதை உறுதிப்படுத்தியது

சவாலான காலங்களில் வாடிக்கையாளர்களுடன் இருந்த எயார்டெல் லங்கா மீண்டும் அதை உறுதிப்படுத்தியது

Published on

இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி மத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருந்தபோதிலும், நாட்டிலுள்ள இளைஞர்களிடையே மிகவும் விருப்பமான தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்குகின்ற எயார்டெல் லங்கா, கடினமான காலகட்டங்களில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக செயற்படும் என்ற அதன் தலையாய நிலைப்பாட்டை மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.

‘ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இலங்கையில் நாம் முதன் முதலில் செயற்பாடுகளை ஆரம்பித்த காலத்திலிருந்து, எயார்டெல் ஒரே இலக்கை நோக்கியே பயணித்தது. உலகத் தரம் வாய்ந்த நெட்வொர்க் அனுபவத்தை வழங்கவும், அதிகபட்ச பெறுமதி மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்க வேண்டும் என்பதே எமது நோக்கமாக காணப்பட்டது. குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த வாக்குறுதியை நாம் நிறைவேற்றியுள்ளோம். சிறந்த முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு பெக்கேஜ்களை வழங்கி, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்க நாம் நடவடிக்கை எடுத்து அதனை செய்து காட்டினோம். அத்துடன் புத்தாக்க உற்பத்திகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்தோம்’

‘இலங்கையின் பொருளாதாரத்தில் மிகவும் கடினமான வரலாற்றுச் சவால் நிறைந்த இக்காலப்பகுதியில் எமது வாடிக்கையாளர்களுக்கு உதவக்கூடிய எமது அர்ப்பணிப்பிலும், அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் நாம் உறுதியாக நின்றோம். அவர்கள் எதிர்கொள்ளும் சுமையை தளர்த்தவும், எமது உலகத் தரம் வாய்ந்த வலையமைப்பை நம்பியிருக்கும் எமது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கல்வி, தொழில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்ந்து இணைந்திருப்பதற்கு விலையானது ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதே எமது நோக்கம்’ என எயார்டெல் லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷீஸ் சந்திரா தெரிவித்தார்.

கடந்த ஓராண்டில் இலங்கையில் 1.1 மில்லியனுக்கும் அதிகமானோர் எயார்டெல் வழங்கிய ப்றீடம் பெக்கேஜ் இற்கு ஈர்க்கப்பட்டு அவர்கள் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு பெக்கேஜ் இற்கு மாறியதன் ஊடாக, கடந்தாண்டில் எயார்டெல் நிறுவனம் இலங்கையின் தொலைத்தொடர்பு துறையில் வலுவான வருமான வளர்ச்சியை பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எயார்டெல் 888 அன்லிமிட்டெட் ப்றீடம் பிளஸ் பெக்கேஜ் ஊடாக எயார்டெல் இலக்கங்களுக்கு வரையறையற்ற அழைப்புகள், பேஸ்புக், மெசஞ்சர், வாட்ஸ்அப், TikTok, Instagram, Viber, IMO, Telegram மற்றும் யூடியூப் ஆகியவற்றிற்கான வரம்பற்ற அணுகலையும், தாராளமாக டேட்டாக்களையும் வழங்குவதுடன் இது 30 நாட்களுக்கு செல்லுபடி காலட்டத்தையும் கொண்டிருந்தது. எமது இந்த பெக்கேஜ் விரிவான மற்றும் சௌகரிய விலையில் தீர்வைத் தேடிய வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

‘எயார்டெல் அண்மையில் தனது 888 பெக்கேஜ்ஜில் இந்த செயலியின் வரம்பற்ற பயன்பாட்டையும் சேர்த்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் 888 ஐ மேலும் தவிர்க்க முடியாததாகவும் மதிப்புமிக்கதாகவும் மாற்றியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே, ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த பெக்கேஜ்ஜிற்கு மாறியுள்ளனர். மேலும் ஒவ்வொரு நாளும் அதிகமான வாடிக்கையாளர்கள் இதனை செயற்படுத்தி வருகின்றனர். அதிலும் 50மூ க்கும் அதிகமான இளைஞர்களே இதனை செயற்படுத்தியுள்ளனர்.

இலங்கையின் இளைஞர்கள் மத்தியில் மக்களின் வர்த்தக நாமமாக எயார்டெல் விளங்குகின்றமை இதன் மூலம் புலனாகின்றது. எமது வாடிக்கையாளர்களின் தேவைகளைத் தொடர்ந்து கண்காணித்து மதிப்பீடு செய்வதிலும், அவர்களது பயன்பாட்டு விருப்பங்களில் அடிப்படையில் நாம் வழங்கும் சலுகைகளை மேம்படுத்துவதிலும் நாம் எப்போதும் கவனமாக செயற்படுகின்றோம். எயார்டெல் 888 பெக்கேஜ் போன்ற தயாரிப்புகள் எப்போதும் மதிப்பு நிறைந்ததாகவே உள்ளது. எமது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுவதையும் நாம் உறுதி செய்வோம்’ என அஷிஸ் சந்திரா மேலும் குறிப்பிட்டார்.

ப்றீடம் அன்லிமிடெட் பெக்கேஜ் ஊடாக பிற்;கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு வலையமைப்பிற்கும் வரையறையற்ற அழைப்புகளை வழங்கிய இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற பெருமையை பெற்ற எயார்டெல், முதலில் அதனை முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கே அறிமுகப்படுத்தியிருந்தது. வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச பெறுமதியை வழங்குகின்றதும், இலங்கை மொபைல் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்யுள்ளதுமான நிறுவனமானது, அதன் முக்கிய நோக்கமாக எயார்டெல் வரம்பற்ற 1098 பிற்கொடுப்பனவு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த பெக்கேஜின் விலை 1,098 ரூபாவாகும்.

எந்த வலையமைப்பிற்கும் வரையறையற்ற அழைப்புகளை வழங்குகிறது, அத்துடன் 40ஜிபி வழங்கியதுடன் 4ஜி தரத்தையும் கொண்டுள்ளது. இதனால் எச்.டி தர வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் மாதாந்தத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய சமூக ஊடக பாவனை மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளையும் வழங்கி அவர்களது மாதாந்த தேவகைளை சந்திக்கின்றது.

அதிநவீன 5ஜி தயாரகும், உட்கட்டமைப்பு மூலம் இயங்கும் அதன் வலையமைப்பில் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களை செயற்படுத்துவது முதல் எயார்டெல் இலங்கை தொலைத்தொடர்பு சந்தையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் இளைஞர்களை வலுவூட்டுவதை நோக்கமாகக் கொண்ட நிறுவனம், சமூக உந்துத்ல் ஏற்படுத்தும் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களை மேம்படுத்தும் எயார்டெல் லங்காவின் முயற்சியானது, அதனை ஒரு சக்தி வாய்ந்த தொலைத்தொடர்பு நிகழ்கால போக்குக்கேற்ற மாறியுள்ளது. அதன்பின்னர் அனைத்து தொழில்துறை சார்ந்தவர்கள் எயார்டெல்லை பின்தொடர்கின்றனர். எயார்டெல்லின் மிகவும் பிரபலமான பிற்கொடுப்பனவு டேட்டா டேட்டா ரோல் ஓவர் விருப்பும், அன்லிமிட்டெட் அழைப்புகளின் அறிமுகமும் இதில் அடங்கும், மேலும் தாராளமாக 30ஜிபி வரையிலான இலவச டேட்டாவை வழங்குகிறது.
‘டேட்டா ரோல் ஓவர்’ அம்சத்தை வழங்கும் இல

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்கேன் தரு திரிய’ ஊடாக மஹியங்கனை, ரிதீமாலியத்த விவசாய குடும்பங்களை கல்வி மூலம் வலுவூட்டும் C. W. Mackie PLC

இலங்கையின் பல்துறை வியாபார நிறுவனமும், Scan Jumbo Peanuts பிரிவில் முன்னணியில் உள்ள நிறுவனமுமான C.W. Mackie PLC...

கொழும்பு கோட்டை புகையிரத நிலைய அபிவிருத்திக்கு உதவும் Fashion Bug

இலங்கையின் பிரபலமான ஆடை வர்த்தகநாமமான பேஷன் பக் (Fashion Bug), தனது நிறுவன சமூக பொறுப்பு (CSR) நடவடிக்கைகளுக்கான...

23ஆவது DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI Supersport பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரை...