ஐக்கிய நாடுகளின் உணவு, விவசாய அமைப்பின் நன்கொடையின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தினால் நாட்டிற்கு வழங்கப்பட்ட உரம் சில பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு இன்று பகிர்ந்தளிக்கப்பட்டது.
பெரும்போக விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், ஒரு ஹெக்டேருக்கு 50 கிலோகிராம் வீதம் விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்கப்பட்டது.
இதன் பிரதான நிகழ்வு, யாழ். சாவகச்சேரி கமநல சேவை நிலையத்தில் நடைபெற்றது.
இதன்போது, 2.5 ஏக்கருக்கு குறைந்த நிலப்பரப்பில் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரம் பகிர்ந்தளிக்கப்பட்டது.