தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு

176

பெருந்தோட்டத்துறையினருக்கு தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு தொடர்பான செயலமர்வு கொட்டகலையில் இடம்பெற்றது.

இதன்போது 200 வருடங்கள் ஆகியும் மலையக பெருந்தோட்டத்துறையினரின் பாதுகாப்பும், சுகாதாரமும் இன்னும் ஒதுக்கப்பட்ட நிலையில் காணப்படுவதன் காரணமாக பாதுகாப்பு மற்றும் சுகாதார விடய உரிமைகளையும், தொழில்சார் உரிமைகளையும் மீட்டெடுக்க பல திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்திய அமைச்சர், பெருந்தோட்டதுறையில் பெண் தொழிலாளர்கள் அதிகமாக தொழிலில் ஈடுப்படுவதாகவும், இவர்களுக்கு தொழில் புரியும் தேயிலை மலைகளில் கழிவரை வசதி, உணவு உண்ணுவதற்கான வசதி வேலை நேரங்களில் நோய்கள் ஏற்பட்டால் அவர்கள் ஓய்வு எடுப்பதற்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத துர்ப்பாகிய நிலையிலே தொழிலாளர்கள் தேயிலை தொழிலை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு தோட்ட நிர்வாகம் அன்று தொட்டு இன்று வரை தொழிலாளர்களுக்கு எவ்விதமான அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்ற தவறி வருகின்றமையையும், இவ்விடயங்கள் தொடர்பாக அமைச்சர் அதிகாரிகளுக்கு மேலும் தெளிவுப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here