நாட்டின் எதிர்கால ஜனாதிபதியாக சம்மாந்துறை, கல்முனை, அம்பாறை, பொத்துவில் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளும் அம்பாறை மாவட்டமும் எந்த மதத்தையும் இனத்தையும் ஓரங்கட்டாமல் முழு மாவட்டத்தையும் ஒன்றிணைத்து சிறந்த அபிவிருத்தியை மேற்கொள்ளவதாகவும், மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இலங்கை தற்போது வங்குரோத்து நாடாக மாறியுள்ளதுடன், நாட்டில் ஸ்மார்ட் வலுவை கட்டியெழுப்ப வேண்டும் என்றே எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி முன்மொழிவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாட்டின் பாடசாலைக் கல்வி முறையை பலப்படுத்தி நாட்டில் ஸ்மார்ட் வலுவை பலப்படுத்த முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாட்டில் 10151 பாடசாலைகள் உள்ளதாகவும், பிள்ளைகள் வெவ்வேறு பாடத்திட்டங்களை கற்பதாகவும் ஆனால் அவை யாவும் பழைய பாடத்திட்டங்கள் எனவும்,அவை புதுப்பிக்கப்பட்டு கல்வியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை,நாட்டில் உள்ள அனைத்தும் ஏலம் விடப்படுவதாகவும், நாட்டின் வளங்கள் 24 மணி நேரமும் விற்கப்படுகின்றன என்றும், இது அரசாங்கத்தின் கொள்கையாக இருந்து வருவதாகவும், ரூபவாஹினி நிறுவனத்திற்கு சொந்தமான ஐ சேனலை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ தயாராகி வருவதாக கூறப்படுவதாகவும், புதிய முதலீட்டாளர்களை அரச ஊடகங்களுடன் இணைக்கும் ஒழுங்கு முறை உள்ளதாகவும், ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தமது சொந்த சொத்தைப் போல, தான் நினைத்தது போல, நினைத்த நபர்களுக்கு விற்கும் சூதாட்டம் அரங்கேறி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ரூபவாஹினி ஐ சேனல் ஒரு தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டு கவரேஜுக்கு அனுமதி பெற முயற்சிக்கின்றனர் என்றும், இந்தச் செயல்கள் அனைத்தும் கண்முன்னே மேற்கொள்ளப்படுவதாகவும், ஐ அலைவரிசைக்கு முதலீட்டாளர்களை போட்டி முறையின் மூலம் பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதையே முதலில் மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வளங்களை விற்கும் சூதாட்டத்திற்கு எதிராக நாம் எழுத்து நிற்க வேண்டும் என்றும், நாட்டின் வளங்களும், நாட்டின் சொத்துக்களும் யாருடைய தனிச் சொத்து அல்ல என்றும், மக்களின் வளங்களைக் கையாளும் போது வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும், கொள்முதல் முறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மீண்டும் இந்த சட்டவிரோத ஏலங்கள் கையகப்படுத்தப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கல்வியையும், சுகாதாரத்தையும் தனியார் மயமாக்க இடமளியேன் என்றும், நாட்டின் ஏழ்மை 40 இலட்சம் அதிகரித்து விட்டதாகவும், இதில் அரசாங்கத்திற்கு எத்தகைய அக்கறையும் இல்லை என்றும், புதிய வளமான நாட்டை உருவாக்க,புதிய இளைஞர்களை பலப்படுத்த,நாட்டின் குடிமக்களை பலப்படுத்த அனைவரும் ஒன்றாய் கைகோர்ப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.