பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தலைமையில் கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப் குழு) இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை அழைக்கப்பட்டிருந்ததுடன், இதில் 2023 மார்ச் 23 மற்றும் 2023 மே 09ஆம் திகதி நடைபெற்ற கோப் குழுக் கூட்டங்களில் வழங்கப்படட பரிந்துரைகைள நடைமுறைப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கைகள் ஆய்வுசெய்யப்பட்டன.
இதன்போது, பாடநெறி பயிற்றுவிப்பாளர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகள்
இந்த நிறுவனங்கள் திறைசேரியால் பராமரிக்கப்படுவதற்குப் பதிலாக சுய வருவாய் ஈட்டக்கூடியதாக மாற வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.
(Fee Levying system) மேலும், ஆலோசகர்களுக்கு செலுத்தப்படும் கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லாததால், ஆலோசகர்கள் சேவையை விட்டு வெளியேறுவது போன்ற பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அதன்படி, பின்வரும் பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டன.
• ஆலோசகர்களின் சம்பளத்தை அதிகரித்து, அதற்குத் தகுதியானவர்களை ஈர்க்க நடவடிக்கை எடுத்தல்
• பயிற்றுவிப்பாளர்களின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அதிகாரசபையின் ஊடாகப் பாடநெறிகள் மூலம் சேகரிக்கப்படும் பணத்தைப் பயன்படுத்துதல் (Fee Levying system)
• ஆலோசகர்களைப் பயிற்றுவிப்பதற்கும் அவர்களுக்கு சில தொழில்முறைத் தகுதிகளை வழங்குவதற்கும் ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்தல்
ஆலோசகர்களின் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துடன் கலந்தாலோசித்துத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோப் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.