follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுதிரைப்படத் துறையை விருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடல்

திரைப்படத் துறையை விருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடல்

Published on

நாட்டின் திரைப்படத் துறையை விருத்தி செய்வது தொடர்பில் ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

திரைப்படத் துறையில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் லலித் வர்ணகுமார தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

விசேடமாக சினிமாத்துறை சுருங்கிவரும் போக்கு தற்பொது ஏற்பட்டுள்ளதாகவும், வருடாந்தம் 5 அல்லது 6 திரையரங்குகள் மூடப்படுவதாவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், திரைப்படத்துக்கான நுழைவுச்சீட்டினால் திரைப்படக் கூட்டுத்தாபனத்துக்கு கிடைக்கும் நிதியின் பகுதி தொடர்பிலும் திரைப்படத் தயாரிப்பாளர்களைக் கண்டுபிடிப்பதில் காணப்படும் சிரமங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

திரைப்படக் கூட்டுத்தாபனச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், வெளிநாட்டுத் திரைப்படங்களைக் கொண்டுவருவதற்கு பதிவுசெய்யும் கட்டணம் மற்றும் ஒரு திரைப்படத்துக்கு திரைப்படக் கூட்டுத்தாபனம் அறவிடும் கட்டணம் திருத்தப்பட வேண்டும் எனவும் இதன்போது பிரேரிக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக நெட்ப்ளிக்ஸ் போன்றவை பிரபல்யம் அடையும் நிலையில் அவற்றுக்கு முகங்கொடுப்பதற்கு திரைப்படக் கூட்டுத்தாபனத்திடம் காணப்படும் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...