டயானாவுக்கு எதிரான மனு – செப்டம்பர் 14 விசாரணைக்கு

294

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரி மோஷன் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை சமர்ப்பித்த சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத், தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மோஷன் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு தொடர்பில் பிளவுபட்ட தீர்ப்பு வெளியாகியுள்ளதால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுவை மீள ஆராய நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த மனுவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14-ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here