இந்திய உதவியுடன் 101 கிராமங்களில் 1401 வீடுகள்

334

நாடு பூராகவும் உள்ள 101 கிராமங்களில் 1401 வீடுகளின் கட்டுமானப் பணிகள் தற்போது இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தெரிவிக்கின்றது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 661 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 338 வீடுகளின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வரும் 101 கிராமங்களில் 07 கிராமங்களில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, கண்டி, வவுனியா, பதுளை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள கிராமங்களின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இந்திய உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் ஒரு பயனாளிக்கு 5 இலட்சம் ரூபா மற்றும் திறைசேரி ஒதுக்கீட்டின் கீழ் ரூபா 100,000/= உதவித் தொகையாக மொத்தம் 6 இலட்சம் ரூபா மீளப்பெற முடியாத அடிப்படையில் வழங்கப்படுகிறது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here