பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசேட குழு

317

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற விசேட குழுவில் அவதானம்

இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் ஆராயப்பட்டது.

குறித்த குழு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய சந்தர்ப்பத்திலேயே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை பொலிஸ், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகாரசபை ஆகியன இந்தக் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்ததுடன், இந்நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு இந்நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்த நாட்டில் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here