follow the truth

follow the truth

July, 13, 2025
Homeவணிகம்Arpico Insurance நிறுவனத்தின் புதிய தலைவராக ரமல் ஜாசிங்க நியமிப்பு

Arpico Insurance நிறுவனத்தின் புதிய தலைவராக ரமல் ஜாசிங்க நியமிப்பு

Published on

இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற ஆயுள் காப்புறுதி நிறுவனமான Arpico Insurance PLC, அதன் நிறைவேற்று அதிகாரமற்ற தலைவராக ரமல் ஜாசிங்கவை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நியமனம் ஜூலை 5, 2023 முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதுடன் பல வருடங்களாக முல்லுல்ல தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றதையடுத்து பல வருடங்களாக விவில் பெரேராவு இந்த பதவியை வகித்ததற்கு பிறகு அந்த பதவிக்கு ஜாசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தனது சமீபத்திய பதவி குறித்து கருத்து தெரிவித்த ரமல் ஜாசிங்க, “குழுமத்தின் தலைவர் கலாநிதி சேன யதேஹிகே மற்றும் Richard Pieris & Company PLC ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக எனது சகாவான கலாநிதி கெலும் சேனாநாயக்கவுடன் மீண்டும் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நிறுவனம் மேலும் வளர்ச்சிக்கு பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவத்தின் மீதும் அவர்களின் உயர்ந்த திறன்கள் மீதும் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. காப்புறுதித் துறையில் Arpico Insurance நிறுவனத்தை அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றும் பார்வைக்கு இது உதவும் என்று நான் நம்புகிறேன். இந்த தனித்துவமான திறன்கள் மூலம், Arpico Insurance பெயரை மேலும் வலுப்படுத்தவும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்கும் மதிப்பு, பாதுகாப்பு மற்றும் சேவையை விரிவுபடுத்தவும் நான் எதிர்நோக்குகிறேன்.” என தெரிவித்தார்.

“Arpico Insurance PLCஇன் தலைவராக ரமல் ஜாசிங்கவை நியமிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். காப்புறுதித் துறையில் அவரது விரிவான அனுபவம் மற்றும் நிபுணத்துவத்துடன், அவர் ஒரு வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்வார் என்று நாங்கள் நம்புகிறோம். நிறுவனத்தின் முக்கிய மதிப்புகள் மற்றும் மூலோபாயத்துடன் அவரது அணுகுமுறை மற்றும் நிறுவன சிறப்பிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை நன்கு ஒத்துப்போகின்றன.

அவரது தலைமையின் கீழ், எமது நிறுவனம் இலங்கையில் மிகவும் நம்பகமான ஆயுள் காப்புறுதி நிறுவனமாக எமது நிலையை வலுப்படுத்தும் வகையில் நீண்ட தூரம் செல்லும்.” என இந்த நியமனம் குறித்து பிரதம நிறைவேற்று அதிகாரியும் பிரதம அதிகாரியுமான கலாநிதி கெலும் சேனாநாயக்க தெரிவித்தார்.

ரமல் ஜாசிங்க காப்புறுதித் துறையில் 25 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு நிபுணர். யூனியன் அஷ்யூரன்ஸில் இருந்து அவரது பயணம் தொடங்கியது, பின்னர் அவர் Fair First Insurance நிறுவனத்திற்கு மாறினார், அவர் ஏசியன் அலையன்ஸ் இன்சூரன்ஸின் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி உட்பட முன்னணி பதவிகளை வகித்து துறையில் ஒரு புகழ்பெற்ற நிபுணராக இருந்தார். மேலும் அவரது தொழில் வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் சிறப்பான ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளார்.

அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் MBA பட்டம் பெற்றவர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பட்டய சந்தைப்படுத்தல் நிறுவனத்தில் புகழ்பெற்ற உறுப்பினராக உள்ளார். மேலும், ரமல் தனது நிர்வாகப் பயிற்சியை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள இந்திய முகாமைத்துவ நிறுவனம் (IIM) ஆகியவற்றில் பெற்றார். தனது தொழில்முறை வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன், அவர் UK பட்டய சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் மூத்த தூதராக தனது தற்போதைய பதவியை வகித்து வருகிறார்.

அவர் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தின் (SLIM) கல்வி சீர்திருத்தக் குழுவிற்கும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை காப்புறுதிச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

90 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கையின் மிகப்பெரிய பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான Richard Pieris & Company PLC இன் துணை நிறுவனமாக, Arpico Insurance PLC தனது வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச அளவிலான காப்புறுதி தீர்வுகளை வழங்குகிறது.

புதிய தலைவரும் தலைமை நிறைவேற்று அதிகாரியும் காப்புறுதித் துறையில் தங்கள் பலம் மற்றும் பல ஆண்டுகளின் வெற்றியைக் கட்டியெழுப்புவதுடன் மேலும் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை நிரூபிப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்கேன் தரு திரிய’ ஊடாக மஹியங்கனை, ரிதீமாலியத்த விவசாய குடும்பங்களை கல்வி மூலம் வலுவூட்டும் C. W. Mackie PLC

இலங்கையின் பல்துறை வியாபார நிறுவனமும், Scan Jumbo Peanuts பிரிவில் முன்னணியில் உள்ள நிறுவனமுமான C.W. Mackie PLC...

கொழும்பு கோட்டை புகையிரத நிலைய அபிவிருத்திக்கு உதவும் Fashion Bug

இலங்கையின் பிரபலமான ஆடை வர்த்தகநாமமான பேஷன் பக் (Fashion Bug), தனது நிறுவன சமூக பொறுப்பு (CSR) நடவடிக்கைகளுக்கான...

23ஆவது DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI Supersport பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரை...