மினுவாங்கொடை, பன்சில்கொட பாலம் கட்டி முடிக்கப்படாமை மற்றும் அது தொடர்பான தற்காலிக வீதியை உரிய முறையில் பராமரிக்காததற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மீது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (24) மினுவாங்கொடை பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவில் கடுமையாக குற்றம் சுமத்தினார்.
இத்திட்டம் தொடர்பான முழுமையான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் தனக்கு வழங்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
மினுவாங்கொடை பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் பூர்த்தி செய்யவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மினுவாங்கொடை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சர் தலைமையில் மினுவாங்கொடை பிரதேச செயலகத்தில் இன்று (24) நடைபெற்றது.