ஆசிய இளைஞர் சாம்பியன்ஷிப் -ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி விளையாட்டு வீரர்களை வலுவூட்டும் Bodyline

166

உயர் செயல்திறன் கொண்ட விளையாட்டு ஆடைகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான MAS Holdingsஇன் துணை நிறுவனமான Bodyline, 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக இலங்கை தடகள சங்கத்துடன் (SLAA) இணைந்து இலங்கை தேசிய தடகள அணிக்கான அதிநவீன விளையாட்டு ஆடைகளுக்கு அனுசரணை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, உஸ்பெகிஸ்தானின் ஒலிம்பிக் போட்டிகளுக்கு வழிவகுக்கும் அனைத்து பயணங்களுக்குமான உயர்தர விளையாட்டு ஆடைகளை Bodyline வழங்கும்.

Bodyline தயாரித்த விளையாட்டு ஆடைகள் MAS இன் பல தசாப்த கால நிபுணத்துவத்தால் ஈர்க்கப்பட்டு அண்மைய கால தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கிறது. நீலம் மற்றும் தங்க நிறங்கள் கொண்ட ஆடைகளின் கவர்ச்சிகரமான வடிவங்கள் மூலம் இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. ஆடைகளில் “கஜசிங்க” உருவமும் இடம்பெற்றுள்ளது, இது யானை மற்றும் சிங்கத்தை இணைத்து வலிமை, புத்தாக்கம் மற்றும் நெகிழ்ச்சி ஆகியவற்றைக் குறிக்கிறது. ஐந்தாவது ஆசிய இளைஞர் தடகள சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை கனிஷ்ட தடகள அணி கஜசிங்கவினால் ஊக்குவிக்கப்பட்ட வடிவமைப்பை கொண்ட ஆடைகளை பெருமையுடன் அணிந்தனர்.

இளம் விளையாட்டு வீரர்களுக்கு வலுவூட்டுவதில் Bodylineஇன் அர்ப்பணிப்பை இந்த ஒத்துழைப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மிக அண்மையில், ஆசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற தேசிய தடகள அணி, சிறப்பாக போட்டியிட்டு பல பதக்கங்களை வென்று பல தேசிய சாதனைகளை படைத்தது.

Bodyline-SLAA கூட்டாணி தேசிய தடகளப் போட்டியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது மேலும் எதிர்வரும் ஆண்டுகளில் SLAA உடனான இந்தக் கூட்டாணி மேலும் வலுப்படுத்த Bodyline தயாராக உள்ளது. “ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை தடகள அணிக்கு அனுசரணை வழங்குவதில் நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம். இந்த திறமையான விளையாட்டு வீரர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி அவர்கள் வெற்றி பெறுவதை கண்டு மகிழ்கிறோம். அந்த வெற்றிகள் உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு ஆடை கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான எங்கள் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.” என Bodyline இன் சந்தைப்படுத்தல் மற்றும் வணிக மேம்பாட்டு பணிப்பாளர் தில்ஷான் மொஹமட் கூறினார்.

இந்த அனுசரணைக்கு மேலதிகமாக, Bodylineஇன் Runner to Runner ஒத்துழைப்பு நடவடிக்கை மூலம் அனைத்து விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கும் விளையாட்டு நிபுணர்களுக்கும் சிறந்த ஓடுதல் அனுபவத்தை வழங்க எதிர்பாக்கின்றது. Bodylineஇன் அதிநவீன பயோமெக்கானிக்ஸ் (biomechanics) ஆய்வகம் தேசிய ரீதியிலான விளையாட்டு வீரர்களின் பங்கேற்புடன் இயக்கச் செயல் மற்றும் வலி ஏற்படக்கூடிய இடங்களை கண்காணிக்க தரவுகளை சேகரிக்கிறது.

Bodyline புத்தாக்கமான தயாரிப்பு யோசனைகளை பரிசோதிப்பதன் மூலம் ஓட்ட வீரர்கள் மற்றும் தினசரி பயன்பாட்டுத் துறைகளுக்கு பரந்த அளவிலான தயாரிப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆய்வகத்தின் பின்னூட்டம் / கருத்து முழுமையாக ஆராயப்பட்டு, தொடர்ச்சியான தயாரிப்பு மேம்பாடுகள் மற்றும் புதிய விடயங்கள் உருவாகின்றன. Bodyline தயாரிப்புகள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் பெற்றுள்ளன, ஏனெனில் அவை வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் மற்றும் சந்தையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் தயாரிப்பு மேம்பாடுகளுடன் ஈடுபட்டுள்ளார்கள்.
உயர்தர விளையாட்டு ஆடைகளை தயாரிப்பதில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் Bodyline ஆனது, விளையாட்டு வீரர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் சமீபத்திய தொழில்நுட்பத்துடன் கூடிய புத்தாக்கமான தயாரிப்புகளை வழங்க உறுதிபூண்டுள்ளது.
Bodyline தொடர்பில்

அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்கள் மூலம் விளையாட்டு வீரர்களின் அனுபவத்தை மேம்படுத்த உறுதிபூண்டுள்ள Bodyline, உயர் செயல்திறன் கொண்ட விளையாட்டு ஆடைகளை தயாரிப்பதில் புகழ்பெற்ற உலகளாவிய தலைவராக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here