நான் என் சொந்த பணத்திலேயே ஹஜ் செய்தேன் – தகவல் உரிமைச் சட்டத்தை பிழையாக பயன்படுத்துகின்றனர்

366

சவூதி அரேபியா அரசாங்கத்தின் ஊடாக இலங்கைக்கு கிடைத்த ஹஜ் விசா மூலமாக அமைச்சர் நசீர் அகமட் அவர்கள் தனது மனைவியுடன் ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்றதாக ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் இலங்கைக்கான ஹஜ் குழுவுக்கு வழிநடத்தக்கூடிய பொறுப்பு வாய்ந்தவராக அமைச்சராக நசீர் அகமட் அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருந்த ஒரே காரணத்தினால் சவூதி அரசாங்கத்தின் ஊடாக கௌரவமாக வழங்கப்பட்டிருந்த மேற்படி ஹஜ் விசாவினை நசீர் அகமட் அவர்கள் பகிரங்கமாக நிராகரிக்காமல் கடந்த 03.07.2022 திகதி அன்று தனது சொந்த நிதியினூடாகவே விமான பயணச்சீட்டுகளை பெற்று ஹஜ்ஜுக்கான நிதியினை தனக்கும் தனது மனைவிக்கும் செலுத்தி உள்ளார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் அவர்களும் தனது சொந்த பணத்திலயே புனித ஹஜ் யாத்திரையை மேற்கொண்டுள்ளார். இதுவே அமைச்சர் ஒருவர் தனது சொந்த நிதியில் விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்த முதலாவது சந்தர்ப்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தெரியாமல் சிலர் இதனை விமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அப்பட்டமான பொய்யினை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக வெறுமனே இலங்கையில் இருந்து புறப்பட்ட ஹஜ் குழுவின் தகவல்களை மாத்திரம் வைத்துக்கொண்டு முழுமையான தகவல்களை அறிந்து கொள்ளாமல் அமைச்சர் நஸீர் அஹமட் அவர்கள் தனது சொந்த பணத்தில் சென்ற பயணத்தினை மக்களை மடையர்களாக்க அப்பட்டமான பொய்களை கட்டவிழ்க்க முனைகின்றார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 2022 ஆண்டு ஹஜ் பயணம் சம்பந்தமாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் அவர்கள் ஊடக சந்திப்பில் 31.07.2022 உரையாற்றிய காணொளியும் சமூக ஊடகங்களில் பேசும் பொருளாக உருவெடுத்துள்ளது.

தொடர்ச்சியாக பல்வேறுபட்ட பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையான சந்தர்ப்ப சூழ்நிலைகளில் கூட பொறுப்புகளில் இருந்து விரண்டு ஓடாமல் அரசுடன் பங்காளியாக இணைந்து முஸ்லிம் மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் அமைச்சர் நஷீர் அகமட் அவர்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றமை யாவரும் அறிந்த விடயமாகும்.இதுபோன்ற அப்பட்டமான பொய்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழாக பெறப்பட்டதாக கூறி அமைச்சர் நசீர் அகமட் அவர்கள் மீது சேறு பூசும் செயற்பாடுகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளப்பட வேண்டும்.

அண்மைய காலமாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறுபட்டு அநீதிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான விடயங்களிலும் ஊடகவியலாளர்கள் தமது கவனங்களை செலுத்தி எமது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக முனைப்புடன் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here