மனித மூளையில் உயிருள்ள புழு

498

அவுஸ்திரேலியாவில் 64 வயது பெண்மணியின் மூளையில் உயிருள்ள புழு ஒன்றைக் ஆஸ்திரேலிய மருத்துவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தையும், கேன்பரா மருத்துவமனையையும் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அந்தப் புழு கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

மூளை அறுவை சிகிச்சைக்குப் பிறகு, 8 சென்டிமீட்டர் புழு மூளையிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன், அந்தப் புழு இன்னும் உயிருடன் நெளிந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அறிவியல் மொழியில் ஆஃபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி (Ophidascaris robertsi) என அழைக்கப்படும் பாம்பு வகையை சேர்ந்த இவ்வகை புழுக்கள் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here