சமூக பொருளாதார அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

118

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் இந்நாட்டில் தனது பணியை ஏற்றுக்கொண்டதன் நிமித்தமே இச்சந்திப்பு இடம் பெற்றது.

இந்நாட்டின் பல்வேறு சமூக பொருளாதார அரசியல் விடயங்கள் தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் பல கருத்துக்கள் இங்கு பரிமாறப்பட்டன. நாட்டில் நிலவிவரும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதிக்கு தெரியப்படுத்தினார்.

அவ்வாறே, தற்போதைய அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தல்களை ஒத்திவைத்து அடிப்படை உரிமைகளை மீறி வருவது தொடர்பிலும் அவர் மேலும் தெரியப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here