follow the truth

follow the truth

July, 12, 2025
Homeவிளையாட்டுஈரான் வீரர் இஸ்ரேல் வீரருடன் கை குலுக்கியதால் வாழ்நாள் முழுதும் விளையாட தடை

ஈரான் வீரர் இஸ்ரேல் வீரருடன் கை குலுக்கியதால் வாழ்நாள் முழுதும் விளையாட தடை

Published on

2023 ஆம் ஆண்டுக்கான உலக பளுதூக்கள் போட்டி போலாந்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஈரானின் முஸ்தபா ராஜேய் தனது பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்துக்கொண்டார். இதேவேளை இந்த பிரிவில் மூன்றாவது இடத்தை இஸ்ரேலின் மக்சிம் ஸ்விர்ஸ்கி பெற்றுக்கொண்டார்.

இவ்வாறான பின்னணியில் குறித்த ஈரான் மற்றும் இஸ்ரேல் வீரர்கள் ஒன்றாக கைலுக்கிக்கொண்டது மட்டுமல்லாமல் புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.

இவ்வாறு கைகுலுக்கிக்கொண்ட காரணத்தால் முஸ்தபா ராஜேய் தனது வாழ்நாள் முழுவதும் எந்த விளையாட்டுக்களிலும் ஈடுபட முடியாது என ஈரான் பளுதூக்கள் அமைப்பு தடை விதித்துள்ளது.

பளுதூக்கும் அணிக்கு தலைமை தாங்கிய ஹமீட் சலேஹினியாவும் பதவியில் இருந்து நீக்கப்பட்டதோடு, மூத்த பளுதூக்கும் வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்த அமைக்கப்பட்ட குழுவும் கலைக்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஈரான் மக்களிடம் தாங்கள் மன்னிப்பு கேட்பதாக ஈரான் பளுதூக்கள் கூட்டமைப்பின் தலைவர் சஜாத் அனுசிறவாநி தெரிவித்துள்ளார். அத்தோடு இஸ்ரேல் நபருடன் கை குலுக்கும் இவ்வாறான சம்பவங்களை இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை-பங்களாதேஷ் முதல் T20 போட்டி – விற்பனைக்கு இனி டிக்கெட்டுகள் எதுவும் இல்லை

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இன்று (10) ஆரம்பமாகவுள்ள இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல்...

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதும் டி20 தொடர் இன்று ஆரம்பம்

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடர் இன்று...

பங்களாதேஷுக்கு எதிரான தொடரிலிருந்து வனிந்து ஹசரங்க நீக்கம்

நாளை (10) ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க...