எதிர்வரும் பெரும்போகத்திற்காக கால்வாய்களை தூய்மைப்படுத்தல், வாய்க்கால்களை தூர் வாருதல், களைகளை பிடுங்குதல் மற்றும் நிலத்தை தயார்படுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சு விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் விவசாயிகளை தௌிவுபடுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் விவசாய திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.