follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான காப்புறுதி திட்டம் அறிமுகம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான காப்புறுதி திட்டம் அறிமுகம்

Published on

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் என்பன இணைந்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான முன்னோடி காப்புறுதி திட்டமான “SLIC ஜீவன சக்தி” அறிமுகபடுத்தி வைக்கப்பட்டது.

இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இதற்கான நிகழ்வு நேற்று(05) ஹில்டன் கிரேன்டில் நடைபெற்றது.

“SLIC ஜீவன சக்தி” என்பது பெருந்தோட்ட தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் – முன்னுரிமை வழங்கும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆயுள் மற்றும் சுகாதார காப்புறுதி திட்டமாகும்.

பெருந்தோட்டதுறையில் தொழில்நேரத்தில் இடம்பெறும் விபத்துகள் மற்றும் மரணங்களை கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலன்கருதி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமையவே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர் ஒருவர் தமக்கான பாதுகாப்புக்கு நாளொன்றுக்கு 3 ரூபாவையே ஒதுக்க வேண்டும், எனவே, இத்திட்டம் வெற்றிகரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...