follow the truth

follow the truth

May, 14, 2024
HomeTOP3'இந்தியா'வின் பெயர் 'பாரத்' என மாற்றம்?

‘இந்தியா’வின் பெயர் ‘பாரத்’ என மாற்றம்?

Published on

இந்தியாவின் பெயரை பாரதம் (ரிபப்ளிக் ஆஃப் பாரத்) என மாற்றுவதற்கான தீர்மானத்தை, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் மத்திய அரசு முன்மொழியலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் நாடாளுமன்றக் கட்டடத்தில் செப்டம்பர் 18 – 21ஆம் திகதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த சிறப்புக் கூட்டத்தில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவின் பெயரை பாரதம் (ரிபப்ளிக் ஆஃப் பாரத்) என மாற்றுவதற்கான தீர்மானத்தைக் கொண்டுவரலாம் எனக் கூறப்படுகிறது.

ஜி20 உச்சி மாநாட்டிற்கு வரும் தலைவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்தளிக்க உள்ளார். இதற்கான அழைப்பிதழில் அவரை குறிப்பிடும் இடத்தில், “இந்தியாவின் ஜனாதிபதி” என்பதற்கு பதிலாக “பாரத்தின் ஜனாதிபதி” என அச்சிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகை தரும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில் உள்ள வார்த்தைகளால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

துபாயில் பறக்கும் டாக்ஸி சேவை

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை அடுத்த ஆண்டு முதல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...

நேபாள பிரதமர் இராஜினாமா

நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்) தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அத்துடன் பிரசந்தா...

இந்தியாவில் விளம்பர பலகை இடிந்து விழுந்து 14 பேர் பலி

இந்தியாவின் மும்பை நகரில் பெரிய விளம்பர பலகை சரிந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பை நகரின் ஊடாக வீசிய பலத்த...