மெனிங் சந்தைக்கு புதிய பேருந்து சேவை?

242

பேலியகொடை மெனிங் சந்தையில் இம்மாதம் முதல் புதிய நிறுவனமொன்றின் மூலம் குப்பைகளை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (சொத்து மற்றும் காணி அபிவிருத்தி) ஈ.ஏ.சி. பிரியஷாந்த தெரிவித்தார்.பேலியகொடை மெனிங் சந்தையில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்கு முகமாக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இதுவரை செயற்படுத்தியுள்ள செய்கைகள் தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (சொத்து மற்றும் காணி அபிவிருத்தி), இ.ஏ.சி. திரு.பிரியஷாந்த இன்று (7) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:
அபிவிருத்தித் திட்டத்தின் படி, கொழும்பில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த மெனிங் சந்தையை, 13 ஏக்கர் பரப்பளவில் பேலியகொடைக்கு நகர அபிவிருத்தி அதிகார சபை கொண்டு வந்தது. பேலியகொடைக்கு கொண்டு வந்த பின்னர், எந்தவொரு வியாபாரியும் நெடுஞ்சாலைகள் ஊடாக இந்த இடத்தை அடைய முடியும். சந்தை இடப்பெயர்ந்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட முடியும். சந்தையை கொண்டு வருவதால் மொத்த வியாபாரத்திற்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. வாகனங்களை நிறுத்தி வைக்க முடியும். ஆனால், பயணிகள் போக்குவரத்து பஸ்கள் அவ்வழியாக இல்லாததால், சில்லரை வியாபாரத்தில் பொதுமக்களுக்கு போக்குவரத்து சிக்கல்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் பஸ்களை இயக்குவது தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையிடம் பலமுறை பேசியுள்ளோம். ஆனால் அது தோல்வியடைந்தது. அந்த வீதிகளில் போதிய ஆட்கள் பஸ்களில் ஏறாததால் போக்குவரத்து துறைக்கு பிடிக்கவில்லை, ஆனாலும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here