நிலவை ஆய்வு செய்வதற்காக Slim (Smart Lander for Investigating Moon) விண்கலத்தை ஜப்பான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
நிலவில் பாறைகளை ஆராய்வது, விண்கலத்தை துல்லியமாக தரையிறக்கும் நடைமுறைகளைக் காண்பிப்பதற்காக 200 கிலோ எடை கொண்ட விண்கலத்தில் பிளாஸ்டிக் சோலார் பேனல், மிக நுண்ணிய கெமராக்கள், Nano Technology-யால் சுருக்கப்பட்ட மின்னணு பாகங்கள் என்பன பொருத்தப்பட்டுள்ளன.
4 அல்லது 6 மாதங்களில் விண்கலம் நிலவை சென்றடையும் என்றும் நிலவின் பாறைகளை ஆராய்வதில் Slim விண்கலம் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.