2022 ஆண்டில் உணவுக்காக 1.2 பில்லியன் ரூபா செலவு

109

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தலைமையில் அரசாங்கப் பெறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிற்கு இலங்கை துறைமுக அதிகாரசபை
அழைக்கப்பட்டிருந்தது.

இலங்கை துறைமுக அதிகாரசபை தொடர்பான 2021ஆம் ஆண்டின் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதிகார சபையின் தற்போதைய செயலாற்றுகை குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கீத் பெர்னாட் உள்ளிட்ட அதிகாரிகள் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது, 2022ஆம் ஆண்டில் உணவுக்காக 1.2 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.

இதன்படி, சிற்றுண்டிகளுக்காக 498 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இந்த பரிந்துரைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக 2023 டிசம்பர் 8 ஆம் திகதி இலங்கை துறைமுக அதிகார சபையை மீண்டும் கோப் குழுவில் அழைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here