ரயில் பாதுகாப்பு கடவைகளை நிர்மாணிக்க நிதி உதவிகளை வழங்க தயார்

200

400 பாதுகாப்பற்ற புகையிரத குறுக்குப் பாதைகள் உள்ளன என்றும், பாரிய செலவில் இந்த நேரத்தில் அவசர சமிக்ஞை கட்டமைப்பை நிறுவுவதற்கு அரசாங்கத்தினால் முடியாது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்த போது குடிமக்களின் உயிரைக் காப்பாற்றுவது பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு என்பதால் குடிமக்கள் சார்பாக இதற்குத் தேவையான நிதி உதவிகளை வழங்க ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் வரை திட்டத்தை செயல்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட செலவுப் பட்டியலை வழங்குமாறும், இதற்கு உடனடியாக ஒத்துழைப்பை வழங்க தயார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here