மீண்டும் வருகிறது, C Rugby சுற்றுத்தொடர்! கொண்டாட்டத்திற்கு நீங்கள் தயாரா?

174

விளையாட்டு, கொண்டாட்டம், உணவு, கேளிக்கை என சகலதும் நிறைந்த கொண்டாட்டத்தில் பள்ளிக் கொடிகளின் கீழ் ஒன்றுகூடும் சகோதர பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணாக்கர்
ரக்பி விளையாட்டில் ஆர்வம் கொண்ட பழைய மாணவர்களும், பழைய மாணவிகளும் தத்தமது பாடசாலைக் கொடிகளைக் கையில் ஏந்தி அணிக்கு ஏழு பேர் கொண்ட C Rugby Tag Rugby சுற்றுத்தொடருக்காக ஒன்றுகூடும் தருணம் இவ்வருடத்திலும் உதயமாகி இருக்கிறது.

எதிர்வரும் செப்ரெம்பர் 16ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு, லொங்டன் பிளேஸில் உள்ள CR&FC மைதானத்தில் சுற்றுத்தொடர் இடம்பெறும். இது போட்டி நேரத்துடன் முடிந்து விடும் கொண்டாட்டமோ, விளையாட்டோ அல்ல.

கடந்த கால நட்புறவை மீளப்புதுப்பித்து, அந்த நாள் ஞாபகங்களை மீட்டிப் பார்த்து, குடும்பத்தினர் சகிதம் இசையுடன் கேளிக்கையை அனுபவித்து, ரக்பி போட்டிகளை பார்;த்து ரசிக்கச் செய்யும் நோக்கத்துடன், ஒரு ஆடுகளத்திற்குள் சகோதர பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணவர்களையும், பழைய மாணவிகளையும் கொண்டு வரும் ஒரே சுற்றுத்தொடர் இதுவாகும்.

இந்த சுற்றுத்தொடரில் சகோதர பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணவர்களும், மாணவிகளும் அடங்கிய 16 அணிகள் கடந்த கால ரக்பி நாட்களை மீட்டிப் பார்க்கையில், பிள்ளைகளுக்கான விளையாட்டுக்கள்,
இடைவேளையின்றித் தொடரும் இசை, தெருவோர உணவுகள் என சகலரும் கொண்டாட்ட மனப்பான்மையுடன் பொழுதைக் கழிக்கக்கூடிய நாள் இதுவாகும்.

இசை மழை பொழிவதற்கு Slipping Chairs, Magic Box Mixup, Jam Lab போன்ற புகழ்பெற்ற இசைக் குழுக்கள் தயாராகவுள்ளதுடன், இவற்றுடன் டுரயெவiஉள போன்ற புகழ்பெற்ற DJ கலைஞர்களும் இணைந்து கொள்ளவிருக்கிறார்கள்.
அன்றைய தினம் பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகும் கொண்டாட்டம், நள்ளிரவு வரை நீடிக்கும். இந்த நேரத்தில் 44 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இரவு 7.30இற்கு ஆரம்பமாகும் Bowl Finals சுற்றுக்கும், தொடர்ந்து இடம்பெறும் Plate Finals சுற்றுக்கும், இறுதிப் போட்டிக்கும்; முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சிப் போட்டிகளும் அவற்றுள் அடங்கும்.

ஒவ்வொரு அணியிலும் 25 வயதிற்கு மேற்பட்ட இரு வீரர்களும், 35 வயதிற்கு மேற்பட்ட மூன்று வீரர்களும், இவர்களது சகோதர பாடசாலையைச் சேர்ந்த (Sister School) மகளிர் கல்லூரியில் இருந்து இரு வீராங்கனைகளும் இடம்பெறுவார்கள். இது வௌ;வேறு காலகட்டங்களைச் சேர்ந்த வீர-வீராங்கனைகள் விளையாடுவதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடாகும். இந்த சுற்றுத்தொடரின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில், ஏற்கெனவே 16 அணிகள் தம்மைப் பதிவு செய்து கொண்டுள்ளன.

இந்த அணிகளில் ரோயல்/விஷாக்கா, இசிப்பத்தனைஃசென் போல்ஸ், சென் ஜோசப் /சென் பிரிட்ஜெட்ஸ், கிங்ஸ்வூட் /பெண்கள் உயர்தரம் கண்டி, வெஸ்லி/மெத்டிஸ்ட், டீ.எஸ்.சேனநாயக்க/சிறிமாவோ பண்டாரநாயக்க, ஆனந்த/மியூசியஸ், திரித்துவ/ஹில்வூட் மகளிர், சென் தோமஸ்/பிஷொப்ஸ், சென்.அந்தனீஸ்/குட்ஷெபர்ட் கண்டி, சென் சில்வெஸ்டர்ஸ்/சென் அந்தனீஸ் மகளிர் கண்டி, தர்மராஜா/மஹாமாயா, சென் பெனடிக்ட்ஸ்/குட் ஷெபர்ட், வித்தியார்த்த/புஷ்பதான, சென் பீற்றர்ஸ் /ஹோலி பெமிலி பம்பலப்பிட்டி, தேர்ஸ்ட்டன் /ரத்னாயக்க மகளிர்க் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் இடம்பெறுகிறார்கள்.

கடந்த ஆண்டு தர்மராஜா கல்லூரி மற்றும் மஹாமாயா மகளிர் கல்லூரியின் பழைய மாணவர்களும், மாணவிகளும் இணைந்த அணி C Rugby தொடரின் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது. திரித்துவஃஹில்வூட் அணி Plate Champions ஆகவும், சென் பெனடிக்ட்ஸ்/குட் ஷெபர்ட் அணி Bowl Champions ஆகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த சுற்றுத்தொடரை தொடர்ந்;து 7ஆவது தடவையாகவும் AGOAL International ஒழுங்கு செய்கிறது. இதற்கு இஸிப்பத்தனை கல்லூரிக்காகவும், தேசிய அணிக்காகவும் விளையாடி, புகழ்பெற்ற ரக்பி நடுவராகவும் திகழும் டில்ரோய் பெர்னாண்டோ தலைமை வகிக்கிறார்.

உத்தியோகபூர்வ பயணப் பங்காளராக PickMe உம், உத்தியோகபூர்வ உணவு மற்றும் மென்பான பங்காளராக Elephant Houseஉம், உத்தியோகபூர்வ வானொலி பங்காளராக YES 101உம், Papare.com, FriMi, ஆகியவையும் சுற்றுத்தொடருக்காக கைகோர்த்துள்ளன. பாடசாலைக் கொடிகள் உற்சாகத்துடன் அசைந்தாட, வெற்றிக் கோஷங்கள் முழங்க, சிறப்பான கொண்டாட்டத்துடன், ரக்பி விளையாட்டின் உத்வேகத்தை அனுபவிக்க வழிவகுக்கும் திருநாள்.

படம் 1
ரக்பி தொடரின் சம்பியன் பட்டத்திற்காக களமிறங்கும் பழைய மாணவ-மாணவியர் இணைந்த அணியின் அங்கத்தவர்கள்

படம் 2
AGOAL International இன் தலைவரும், தேசிய ரக்பி வீரரும், புகழ்பெற்ற நடுவருமான டில்ரோய் பெர்னாண்டோ ஊடக மாநாட்டில் உரையாற்றுகிறார்.

படம் 3
கடந்த ஆண்டு C Rugby தொடரின் சம்பியன்களான தர்மராஜா கல்லூரி மற்றும் மஹாமாயா கல்லூரியின் பழைய மாணவர்களும், மாணவிகளும் இணைந்த அணி

படம் 3
2022 C Rugby தொடரில் Plate சம்பியன்களான திரித்துவக் கல்லூரி மற்றும் ஹில்வூட் கல்லூரியின் பழைய மாணவர்களும், மாணவிகளும் இணைந்த அணி

No description available.No description available.

No description available.

No description available.

No description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here