நாட்டின் பொறுப்பை ஏற்க சஜித் தயாராக உள்ளார்

571

எந்த நேரத்திலும் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும், நாட்டின் பொறுப்பை ஏற்க சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் அதன் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

நாட்டின் ஒவ்வொரு தேர்தல் பிரிவுகளிலும் ஐக்கிய மக்கள் சக்தி அதிகார சபைகளை நடத்தி முடித்துள்ளதாகவும், தனது கட்சி எந்த நேரத்திலும் தேர்தலுக்கு தயாராகும் எனவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்துவ ஊக்குவிப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்தறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைப்பாளர்களும் இணைந்து கட்சியின் கிளைச் சங்கங்கள், மகளிர் சங்கங்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களை நிறுவும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் இந்த வேலைத்திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் எனவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here