ஜனாதிபதி இல்லாத நிலையில் 4 பதில் அமைச்சர்கள் நியமனம்

465

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலிருந்து வெளியேறி இருப்பதால் அக்காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, அமைச்சர் கனக ஹேரத், தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் பெண்கள், சிறுவர் மற்றும் சமூக சேவைகள் பதில் பிரதி அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதில் நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here