புதிய வரி செலுத்துனர்களைப் பதிவுசெய்ய விசேட திட்டம்

35

உழைக்கும் போது செலுத்தும் வரி தொடர்பில் எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தில் திருத்தங்களைச் சமர்ப்பிப்பதற்கு தலையீடு செய்வதாகப் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார்.

வரித்திருத்த நடவடிக்கையின் போது பாதிக்கப்படும் தொழிற்சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தொழிற்சங்கங்கள் சிலவற்றுடன் கலந்துரையாடுவதற்காக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்றத்தில் கூடியிருந்தது.

இதுவரை வரிச் செயற்பாடுகளுடன் தொடர்புபடாத நபர்களைத் தொடர்புபடுத்திக் கொள்வதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவிருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு அமைய புதிய வரி செலுத்துவோரைக் குழுவாகப் பதிவுசெய்யும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

வரிப் பிரச்சினைகள் காரணமாக பல்வேறு துறைசார் நிபுணர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றமையையும் குழு ஏற்றுக் கொண்டது. இதற்கு அமைய அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில் வலியுறுத்துவதாகவும் குழு தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு உறுதியளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here