லொஹான் ரத்வத்த பிணையில் விடுதலை

75

விளக்கமறியலில் இருந்த தமிழ் கைதி ஒருவரின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியமை தொடர்பில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பிரதான நீதிவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிவான் நாலக்க சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கினை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 4ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here