புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகள் இன்று முதல் அமுலுக்கு

410

புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகள் இன்று (15) முதல் அமுல்படுத்தப்பட உள்ளன.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் கடந்த 9ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அதன்படி இன்று முதல் இந்த சட்டம் தொடர்பான விதிகள் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்பு சட்டம் கடந்த ஜூலை 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் சட்டத்தின் ஏற்பாடுகளும் இன்று முதல் அமுலுக்கு வருவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here