தெரணியகல, உடமாலிபொட பிரதேசத்தில் தீயினால் எரிந்து நாசமான சனுகி விஹங்கா என்ற சிறுமிக்கு புதிய வீடொன்றை நிர்மாணிக்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் செவன நிதியிலிருந்து ஏழரை இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தெரணியகல, உடமாலிபொட பிரதேசத்தில் வசிக்கும் சனுகி விஹங்கா சிறுமியினுடைய வீடு கடந்த 14ஆம் திகதி இரவு ஏற்பட்ட தீயினால் முற்றாக எரிந்து நாசமானது. இது தொடர்பில் ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டதையடுத்து, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.