இலங்கையின் பொருளாதார முன்னேற்ற செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவிற்கும் இடையிலான சந்திப்பு ஐ.நா தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது.
இச் சந்திப்பின் மூலம் உலக வங்கியானது இலங்கையின் அபிவிருத்தி இலக்குளில் மேலும் உதவி செய்வதுடன், உலக வங்கியின் அர்ப்பணிப்பையும் நல்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலிசப்ரி உள்ளிட்ட உலக வங்கி பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது