follow the truth

follow the truth

May, 23, 2024
Homeஉலகம்ஹிஜாப் அணியாத ஈரானிய பெண்களுக்கு 10 ஆண்டுகள் சிறை

ஹிஜாப் அணியாத ஈரானிய பெண்களுக்கு 10 ஆண்டுகள் சிறை

Published on

ஈரான் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆடை தொடர்பான சட்டங்களை மீறும் ஈரானிய பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு விதிக்கப்படும் சிறை தண்டனை மற்றும் அபராதம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சட்டமாக இயற்றப்பட்டால், ஈரானிய பெண்கள் மற்றும் சிறுமிகள் பெண்களின் ஆடை தொடர்பான சட்டங்களை மீறி ஆடை அணிந்தால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

அது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பெண்கள் மீது மூன்றாண்டு விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், ஈரான் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த சர்ச்சைக்குரிய சட்டமூலம் சட்டமாக அமுல்படுத்தப்பட வேண்டுமாயின் ஈரானின் அறங்காவலர் சபையில் நிறைவேற்றப்பட வேண்டும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

LATEST NEWS

MORE ARTICLES

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை வீழ்ந்ததில் 9 பேர் பலி

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் காயமடைந்துள்ளனர். மெக்ஸிகோவில் ஜூன் 2...

ஈரான் ஜனாதிபதியின் ஜனாஸா இன்று நல்லடக்கம்

ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச்...

பிரிட்டனில் ஜூலையில் பொதுத்தேர்தல்

பிரிட்டனில் ஜூலை 4ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரிட்டனில் நடைபெற்ற...