பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – மீறினால் கடும் சட்ட நடவடிக்கை

210

பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு என்பனவற்றை கருத்திற்கொண்டு இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில், 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவற்றில் ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய முள்கரண்டிகள், குழாய்கள், பிளாஸ்டிக் மாலைகள், பிளாஸ்டிக் இடியப்ப தட்டுகள் மற்றும் உணவுக் கொள்கலன்கள் என்பன தடை விதிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில் உள்ளடங்குகின்றன.

இந்த தடைகளை மீறி பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கழிவு முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்தார்.

இது தொடர்பான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here