புலமைப்பரிசில் பரீட்சை : மேலதிக வகுப்புகளுக்கு 11ம் திகதி நள்ளிரவு முதல் தடை

340

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், ​மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தடையை மீறி செயற்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) 2,888 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here