கனடாவைச் சேர்ந்தவர்கள் இந்தியா வருவதற்கான விசா சேவையை அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தது.
இந்நிலையில், கனடாவின் ஒட்டாவா, டொராண்டோ, வான்கோவர் நகரங்களில் விசா வழங்கும் சேவை இன்று முதல் தொடங்கும் என்று இந்திய தூதரகம் நேற்று அறிவித்தது.
குறிப்பாக, நுழைவு விசா, தொழில் விசா, மருத்துவ விசா, மாநாட்டு விசா ஆகிய விசாக்கள் வழங்கப்படும் என்றும், அவசர நிலையைக் கருத்தில் கொண்டு வழங்கப்படும் சேவைகள் வழக்கம்போல் வழங்கப்படும் என்றும் இந்திய தூதரகம் அறிவித்தது.