இன்று (28) காலை பாணந்துறை நகருக்கு அருகில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
விளையாட்டுப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ள நிலையில், தீயினால் பாரியளவில் விளையாட்டுப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.