யார் வேலை செய்கிறார்கள்? யார் வேலை செய்யவில்லை என்பது எனக்கு நன்றாகவே விளங்கும்

166

மக்கள் எதிர்பார்க்கும் அமைப்பு மாற்றத்தை மக்களுக்கு சேவை செய்வதன் மூலமே செய்ய முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எனவே, அரச அதிகாரிகள் முதலில் மக்களுக்கு தங்களின் சேவைகளை சரியாக செய்ய அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் 55 புதிய உதவிப் பணிப்பாளர்களுக்கான பதவி உயர்வு கடிதம் வழங்கும் நிகழ்வில் இன்று (30) கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபை என்பது நாட்டின் அபிவிருத்திக்கு நேரடியாகப் பொறுப்பான, மக்களுடன் நேரடியாகக் கையாளும் ஒரு நிறுவனமாகும். அதனால், பதவி உயர்வு பெறும் இந்த அதிகாரிகள் அனைவரும், தங்கள் தேவைகளை நிறைவேற்ற, மக்களை கஷ்டப்படுத்தாமல் தீவிரமாக செயல்பட வேண்டும். ஏனென்றால், அதிகாரிகள் வேலை செய்யாதபோது, ​​அரசியல்வாதிகளைத்தான் அவர்கள் ஏசுகிறார்கள். மக்கள் அதிகாரிகளை குறை கூறுவதில்லை. அந்த நிலைக்கு நான் விழத் தயாரில்லை.

இந்த நிறுவனத்தில் நடக்கும் அனைத்தும் எனக்கு தெரியும். எனவே யார் வேலை செய்கிறார்கள்? யார் வேலை செய்யவில்லை என்பது எனக்கு நன்றாகவே விளங்கும்.

அண்மைக்காலமாக இந்நிறுவனத்தில் இடம்பெற்ற சில சில விடயங்கள் காரணமாக நகர அபிவிருத்தி அதிகார சபை தொடர்பில் மக்கள் தவறான கண்ணோட்டத்தை கொண்டுள்ளனர். அந்த தவறான படத்தை நாம் அழிக்க வேண்டும். அதைச் செய்வதற்கான எளிதான வழி வேலை செய்வதுதான். பதவி உயர்வு பெற்ற இந்த அதிகாரிகளிடம் நேர்மையான சேவையை எதிர்பார்க்கிறேன். அதனை 8 மணித்தியாலத்துக்கு மட்டுப்படுத்த வேண்டாம். மக்களை திருப்திப்படுத்துவதன் மூலம் ஒரு நாட்டை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பதை நாம் குழுவாகக் கூடி கலந்துரையாட வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.